Wednesday 16 December 2015

செடியை வெட்டாததால் மரமான விஷம்

நான் சிம்புவின் ஆதரவாளன் இல்லை. உண்மையில் சிம்புவின் படங்களை பார்த்து மிக குறைவே. இன்று பீப் சாங்கால் அவர் பெண்களை கொச்சைபடுத்தி விட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதற்கு அவர் மட்டும் பொறுப்பல்ல  என்பதும் உண்மை.

சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் அதிகம் புலப்படாத வன்னம் ஆரம்பித்த  ஈவ் டீசிங் ரஜினி கமல் காலங்களில் உச்சத்தை தொட்டது.விஜய் அஜீத் படங்களிலும் ஈவ் டீசிங் இல்லாமல் இல்லை.

தன்னை அடுத்த தலைவராக காட்ட நினைத்து விஜய் நடித்த தலைவா திரைப்படத்தில் சம்மந்தமே இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் பாடல் இடம்பெற்றது.

மன்னன் படையப்பா படங்கள் பெண்களை பின்னோக்கி அழைத்தது .சந்திரமுகியில் தேவையே இல்லாத  ஒரு பெண் வில்லியை இனைக்கப்பட்டிருந்தது.
அன்று யாருமே பொங்கவில்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரியது.

அன்று தனலாக  இருந்தது இன்று சிம்பு என்னும் அரைகுறையால் நெருப்பாக மாறியுள்ளது.

ஆனால் நல்ல படங்களை ஆதரிக்காமல் குப்பைகள் வர யார் காரணம்.

 மக்களான நாம் அதிலிருந்து தப்ப முடியுமா.?

வழக்கு எண்18/9, ஆதலால் காதல் செய்வீர், மற்றும் பல நல்ல படங்களை ஆதரிக்காதமையால் இளைஞர்களுக்கான படம் என்ற போர்வையில் பல குப்பைகள் கல்லா கட்டுகின்றன
 இன்று பிரகாஷ் ஆபாசத்தின் அடுத்த பரிமானத்தை திரிஷா இல்லனா நயன்தாராவில் காட்டினார்.

தி இ ந வந்த அதே சமயத்தில் கவுன்டமணி நடித்த 49  ஓ விவசாயிகளின் பிரச்சனை  சொன்ன படம் வெளியானது.49ஓ படுதோல்வி அடைய தி இ ந அபார வெற்றி பெற்றது.
ஆக மக்களான நாம் சிம்புவை கைகாட்டி தப்பித்து கொள்ள முடியாது.

தன் தாய் சகோதரி பெண் என்ற முறையில் சிம்புவிற்கு தார்மீக  உரிமையில்லையா என்று நாம் கேட்டாலும் அந்த குற்றத்தை ஆரம்பத்திலேயே கிள்ளாத நம் மீதும் குற்றம் உள்ளத என்பதை மறுக்க முடியாது.

Sunday 13 December 2015

எத்தனை நாட்களுக்கு வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டுவீர்கள்.

எத்தனை நாட்களுக்கு வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டுவீர்கள்.

வெள்ள பாதிப்புகளுக்கு ஜெயலலிதா மட்டுமே பொறுப்பு என்ற ரீதியில் பல அதிமேதவிகள் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை அதுதானா

ஏரி புறம்போக்குகள் பட்டா நிலமாக மாற்றப்பட்டது கடந்த  ஐந்து ஆண்டுகளாகத்தான் நடைபெறுகிறதா?

விடில்லா ஏழைகளைப் பற்றி என்றுமே கவலைபடாத சமூகம் மாடி வீடு சாலைக்கு வந்ததும் ரகுமான் சித்தார்த் அகதிகளானதும் கவலையில் மூழ்கியது

இன்றும் ரேசன் அட்டை இல்லாத நாடோடி சமூகம் இங்கு இருக்கவே செய்கிறது.நிலங்கள் கையப்படுத்தும் பொழுது பல லட்சக் கணக்கான விவசாயிகள் அகதிகள் ஆனாதையானதைப் பற்றி கவலைபடாத சமுதாயம்தான் இது.

சென்னையே மழையில் தின்டாடினாலும் அதிகம் பாதிப்படைந்தது ஏரி நிலங்களில் வீடு கட்டிய பகுதிகள்தான். அங்கே எப்படி வந்தார் ஜெயலலிதா.
சென்னை மாநகராட்சியின் மேயர் சைதை துரைசாமி. அப்படியெனில் சென்னையில் நடந்த துயரங்களுக்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்வது ஏன்? வேலூரில் ஒரு அசம்பாவிதம் நடந்தால் அந்த மாநகராட்சியின் மேயர் கார்தியாயினியை விட்டு முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறுவீர்களா?

சென்னையின் துயரத்திற்க்கு அரசியல் மட்டுமல்ல பல சமூக காரணங்களூம் உண்டு.அதில் நான் நீ நாம் ஜெயலலிதா கருனாநிதி அளும்கட்சி எதிர்கட்சி என அனைவரும் அதில் இருப்பார்கள்

பரவாயில்லை itisprashanth சொன்னது போல் பீப் சாங் கேட்டு சந்தோசமாக  இருப்போம்