Friday 21 August 2015

பாபநாசம்



     பாபநாசம் ஒரு மிகச் சிறந்த படம். கமலஹாசன் தன் அறிவை காட்டுகிறேன் என்று கதை எழுதி கொல்லாமல் அளவான கதைக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
  
    குளிக்கும் படம் எடுத்து மிரட்டும் ஒருவனிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள நடக்கும் போராட்டத்தில் கொல்லப்படும்  ஒருவன் அதன்பின் நடக்கும் கதை என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல  என்றாலும் பாபநாசம் நம் கவனத்தா ஈர்பதற்கு காரணம் கதாநாயகனின் கதாபாத்திரமும் கதை சொல்லப்பட்ட விதமும் தான்.

  பொதுவாக  இது போன்ற கதையில் கதாநாயகன் பன்ச் வசனம் பேசியும் நம்ப முடியாத வீரத்தை காட்டியும் தமிழ் சினிமா கதை சொல்லி இருக்கும். ஆனால் வீர வசனம் எதுவும் இல்லாமல் யதார்த்த கதை சொல்லியுள்ளார் இயக்குநர்.

     இவையனைத்தையும் தான்டி  பாபநாசத்தின் சிறப்பு என்னவெனில்  அதிகாரத்தின் எல்லை.ஐஜியின் மகனை கண்டுபிடிக்க ஒரு சராசரி மனிதனை எந்தவித மனித  உரிமையையும் கடைபிடிக்காமல் சட்டமெல்லாம் அதிகார வர்கத்தையும் பணம்  படைத்தவர்களின் சொல்லுக்கு எப்படி அடுகிறது என்பதும் அதில் விட்டில் பூச்சியாக அன்றாடங்காய்சிகள் எப்படி அடிபடுகிறார்கள் என்பதுவுமே.

80 சதவிகித  சதாரண மக்களின் ஆதரவில் அரியன் ஏறும் ஆட்சியாளர்கள் ஓட்டளித்தவர்களை நிராயுதபானியாக அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான சட்டத்தையும் பிடிங்கிக் கொள்கிறார்கள்.
அப்பாவி மக்கள் அறியாமல் செய்யும் சிறு தவறுக்காக காலம் முழுதும் மன உளச்சலில்
வாழ்கிறார்கள்.
இறுதி காட்சியில் கமலஹாசன் கூறுவது போல்  தன் மகன் மீது தவறு இருந்தாலும் அவனை காப்பாற்றவே அந்த   ஐஜி தாய்  முயன்று இருப்பாள்.

அதிகாரம் பணம் இல்லாத தாய்மார்கள் பலர் குற்றம் செய்யாத மகன்களை சிறையில் விட்டு அப்பட்டமான மனித  உரிமை மீறல்களை சந்தித்து வருகின்றனர்.அது போன்ற அப்பாவிகளுக்கு இத்திரைப்படம் பாபநாசத்தை சமர்பிப்போமாக....

No comments:

Post a Comment