Wednesday 16 December 2015

செடியை வெட்டாததால் மரமான விஷம்

நான் சிம்புவின் ஆதரவாளன் இல்லை. உண்மையில் சிம்புவின் படங்களை பார்த்து மிக குறைவே. இன்று பீப் சாங்கால் அவர் பெண்களை கொச்சைபடுத்தி விட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதற்கு அவர் மட்டும் பொறுப்பல்ல  என்பதும் உண்மை.

சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் அதிகம் புலப்படாத வன்னம் ஆரம்பித்த  ஈவ் டீசிங் ரஜினி கமல் காலங்களில் உச்சத்தை தொட்டது.விஜய் அஜீத் படங்களிலும் ஈவ் டீசிங் இல்லாமல் இல்லை.

தன்னை அடுத்த தலைவராக காட்ட நினைத்து விஜய் நடித்த தலைவா திரைப்படத்தில் சம்மந்தமே இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் பாடல் இடம்பெற்றது.

மன்னன் படையப்பா படங்கள் பெண்களை பின்னோக்கி அழைத்தது .சந்திரமுகியில் தேவையே இல்லாத  ஒரு பெண் வில்லியை இனைக்கப்பட்டிருந்தது.
அன்று யாருமே பொங்கவில்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரியது.

அன்று தனலாக  இருந்தது இன்று சிம்பு என்னும் அரைகுறையால் நெருப்பாக மாறியுள்ளது.

ஆனால் நல்ல படங்களை ஆதரிக்காமல் குப்பைகள் வர யார் காரணம்.

 மக்களான நாம் அதிலிருந்து தப்ப முடியுமா.?

வழக்கு எண்18/9, ஆதலால் காதல் செய்வீர், மற்றும் பல நல்ல படங்களை ஆதரிக்காதமையால் இளைஞர்களுக்கான படம் என்ற போர்வையில் பல குப்பைகள் கல்லா கட்டுகின்றன
 இன்று பிரகாஷ் ஆபாசத்தின் அடுத்த பரிமானத்தை திரிஷா இல்லனா நயன்தாராவில் காட்டினார்.

தி இ ந வந்த அதே சமயத்தில் கவுன்டமணி நடித்த 49  ஓ விவசாயிகளின் பிரச்சனை  சொன்ன படம் வெளியானது.49ஓ படுதோல்வி அடைய தி இ ந அபார வெற்றி பெற்றது.
ஆக மக்களான நாம் சிம்புவை கைகாட்டி தப்பித்து கொள்ள முடியாது.

தன் தாய் சகோதரி பெண் என்ற முறையில் சிம்புவிற்கு தார்மீக  உரிமையில்லையா என்று நாம் கேட்டாலும் அந்த குற்றத்தை ஆரம்பத்திலேயே கிள்ளாத நம் மீதும் குற்றம் உள்ளத என்பதை மறுக்க முடியாது.

Sunday 13 December 2015

எத்தனை நாட்களுக்கு வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டுவீர்கள்.

எத்தனை நாட்களுக்கு வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டுவீர்கள்.

வெள்ள பாதிப்புகளுக்கு ஜெயலலிதா மட்டுமே பொறுப்பு என்ற ரீதியில் பல அதிமேதவிகள் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை அதுதானா

ஏரி புறம்போக்குகள் பட்டா நிலமாக மாற்றப்பட்டது கடந்த  ஐந்து ஆண்டுகளாகத்தான் நடைபெறுகிறதா?

விடில்லா ஏழைகளைப் பற்றி என்றுமே கவலைபடாத சமூகம் மாடி வீடு சாலைக்கு வந்ததும் ரகுமான் சித்தார்த் அகதிகளானதும் கவலையில் மூழ்கியது

இன்றும் ரேசன் அட்டை இல்லாத நாடோடி சமூகம் இங்கு இருக்கவே செய்கிறது.நிலங்கள் கையப்படுத்தும் பொழுது பல லட்சக் கணக்கான விவசாயிகள் அகதிகள் ஆனாதையானதைப் பற்றி கவலைபடாத சமுதாயம்தான் இது.

சென்னையே மழையில் தின்டாடினாலும் அதிகம் பாதிப்படைந்தது ஏரி நிலங்களில் வீடு கட்டிய பகுதிகள்தான். அங்கே எப்படி வந்தார் ஜெயலலிதா.
சென்னை மாநகராட்சியின் மேயர் சைதை துரைசாமி. அப்படியெனில் சென்னையில் நடந்த துயரங்களுக்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்வது ஏன்? வேலூரில் ஒரு அசம்பாவிதம் நடந்தால் அந்த மாநகராட்சியின் மேயர் கார்தியாயினியை விட்டு முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறுவீர்களா?

சென்னையின் துயரத்திற்க்கு அரசியல் மட்டுமல்ல பல சமூக காரணங்களூம் உண்டு.அதில் நான் நீ நாம் ஜெயலலிதா கருனாநிதி அளும்கட்சி எதிர்கட்சி என அனைவரும் அதில் இருப்பார்கள்

பரவாயில்லை itisprashanth சொன்னது போல் பீப் சாங் கேட்டு சந்தோசமாக  இருப்போம்

Saturday 21 November 2015

எங்கே பத்திரிக்கை தர்மம்


தமிழ் நாளேடுகள் திமிழகத்தில் அரங்கேறும் பல முறைகேடுகளை கண்டும் காணாதது போல் இருக்கின்றது.

அம்முறைகேடுகள் அம்பலமான பின் அதை சுடான பரபரப்பு செய்தியாக வெளியிடுகிறது.
பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்க வைக்கின்றனர் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள்.

Friday 9 October 2015

வல்லவன் விதி என்று மாறும்..?

மதமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது, பெண் கல்வி முதல் அனைவரின் உணவு பழக்கம் வரை என்று நாம் நினைத்தால் நாம் வடி கட்டிய முட்டாள்கள்.

ஒரு காலத்தில் பிராமனர்கள் மாட்டிறைச்சி உண்டா்கள் அதனால் அது சரி. பின் அவர்கள் அதை நிறுத்தியதால் இன்று அது தவறு.

ஆக  ஆதிக்க சாதியினர் செய்வது சரி. அவர்கள் செய்ய கூடாது என்று சொல்லி அதை மீறி செய்தோமானால் அது தவறு.

கடல் கடந்து போனால் பாவம். ஆனால் இன்று பெரும்பாலான பிராமனர்கள் அயல் நாடுகளில்.

கூத்து நாடகம் ஆகியவற்றில் நடிப்பவன் கீழ் சாதியாவான் என்று இந்து மதம் கூறுகிறது. ஆனால் இன்று திரை துறையில் பல பிராமனர்கள் உள்ளார்கள்.

வல்லவன் விதி என்று மாறும்..?

Monday 5 October 2015

வெறுப்பு அரசியல்

வெறுப்பு அரசியலை வைத்தே எத்தனை நாட்கள் குளிர் காய்வார்கள் இந்த இந்து அடிப்படைவாதிகள். பசுவதை தவறு என்றால் புல் பூன்டு என்று எதை துன்புறுத்தினாலும் தவறு தானே

பிராமனத்தின் எச்சமான சாதியையும்  அவர்களின் அடிமை இந்து அடிப்படைவாத கட்சிகளை வைத்து வெறுப்புனர்வை தூன்டி வருகின்றனர் இந்த அடிப்படைவாதிகள்.

வெறுப்பரசியலில் உயிர் பலி என்றால் அது அப்பாவிகளும் அன்னாடங்காய்ச்சிகளுமே. அவர்களின் பினங்களின் மீது நடக்கும் அரசியல் என்றுதான் ஒழியும்?

Saturday 3 October 2015

புலி சொல்லும் பாடம் என்ன?

100 கோடி ரூபாய் படங்கள் எடுப்பவர்களெல்லாம் உண்மையில் சினிமா துரோகிகள்.

இரன்டாம் உலகம் படத் தோல்வியால் அந்த  தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.

பீமாவால் விழுந்த ரத்னம் சமீபத்தில் தான் மீண்டெழுந்தார்.
குஞ்சுமோனெல்லாம் காணாமலே போய் விட்டார்.

ஐ படத்தால் சொத்தை அடமானம் வைத்தார் ரவிச்சந்திரன்.அதன் பின் கொடுத்த பேட்டியில் ,ஒரு கோடி சம்பளம் தர தாமதமானதால் படப்பிடிப்பிற்கு செல்ல மறுத்த  இயக்குனரைப் பற்றி கூறினார்.

புலியால் அத்தயாரிப்பாளர் சந்திக்கும் இழப்பை யார் ஈடு செய்வது?

பாகுபலியோ எந்திரனோ தோல்வியடைந்தாலும் ரஜினி ராஜமௌலியின் பிம்பத்தால் தப்பியிருக்கும் ஆனால் அவை பெரும் வெற்றி அடைந்தது.

புலி சொல்லும் பாடம் ஒன்றெ. 100 கோடிக்கு வர்த்தகம் இல்லாத சூழ்நிலையில் அவ்வளவு பெரிய முதலீடு என்பது தயாரிப்பாளர் போன்றோரை கொல்வதற்கு சமம்

Thursday 24 September 2015

நலமானவற்றை நோக்கி மக்களான நாம் பயனிப்போம்

மக்களின் நலனே ஆட்சியாளரின் நலன் என்று திருவள்ளுவர் சானக்கியர் முதல் இன்றைய அரசியல் அறிஞ்சர்கள் வரை கூறியுள்ளனர். ஆனால் இன்று மக்கள் சக்தியை மக்களும் புரிந்து கொள்வதில்லை, மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் என்பதை  இந்தியாவில் உள்ள பெரும்பாலான  ஆட்சியாளர்கள் அதைப் பற்றி நினைப்பதில்லை.

தவறு யார் பக்கம் என்பதை விட சரியான  ஆட்சிமுறை எது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

நலமானவற்றை நோக்கி மக்களான நாம் பயனிப்போம்.

Saturday 19 September 2015

49 - ஒ

49- ஒ விறுவிறுப்பான படமா என்றால் இல்லை. திரைக்கதையிலும் தொய்வு உள்ளது. ஆனால் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

தமிழக அரசியல் எந்த மையத்தில் சுற்றுகிறது, மக்கள் எவ்வளவு பொறுப்புனர்வற்று உள்ளனர் என்பதையெல்லாம் தான்டி  ஓட்டு என்ற ஒரு மாபெறும் ஆயுதத்தை மக்கள் எவ்வாறு உனராமல் உள்ளார்கள் என்பதை வலியுறுத்தும் படமாக 49- ஒ உள்ளது.

கொடுக்கப்பட்ட சிறு இடத்தில் கதாநாயகி இல்லாமல் பின்னனி இசை போன்ற முக்கியமானவையெல்லாம் கொடுக்கப்பட்ட சிறு பணத்தைக் கொன்டு படம் எடுத்த இயக்குனர் ஆரோக்கியதாஸை நிச்சயம் பாராட்ட வேண்ட

அஜீத் விஜய் சூர்யா விக்ரம் போன்ற பெரிய நட்சத்திரங்களாக சொல்லிக் கொள்ளுபவர்கள் சமூக பொறுப்புனர்வுள்ள படங்கள் தருகிறார்களா என்பது கேள்விக்குறியே. அப்படி ஒரு படத்தில் தன் பங்கை சரியாக செய்த கவுண்டமணியை பாராட்டியே ஆக வேண்டும்.

Friday 18 September 2015

வைகோவின் அரசியல் வியூகம

வைகோவின் முடிவுகள் சட்டமன்ற தேர்தல்களின் பொழுது முரன்பட்டதாகவே உள்ளது.
தற்பொழுதிய சூழ்நிலையில் அறப்போர்களுக்கெல்லாம் மதிப்பிறுப்பதே இல்லை. ஆகையால்தான் கொள்கைகள் பற்றி முழக்கமிடும்  கம்யூனிஸ்ட்கள் கூட தேர்தல் நேரங்களில் சமரசம் செய்து கொள்கின்றன

 பாமகவை போன்று சில தொகுதகளிலாவது தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்றால் தனித்து நிற்பதில் அர்த்தமுள்ளது. ஆனால் மதிமுகவின் ஓட்டுக்கள் பரவலாக உள்ளதேயொழிய எந்த தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை.

18% நாடாளமன்ற தேர்தலில் வாக்கு மூன்றாம் அணி பெற்றாலும் அதில் விஜயகாந்தின் வாக்குகள் பெறும் பங்காற்றின. தனித்து நிற்க வேண்டிய அவசியம் தற்பொழுது நிலாவத பட்சத்தில் மதிமுக தனித்து நிற்பது யாராலும்ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகையால் நடைமுறைக்கு சரிவரும் நல்லதொரு முடிவை திரு.வைகோ எடுப்பாராக

Thursday 17 September 2015

யார் காரணம்

மாநகர பேருந்தில் பயனம் செய்த பொழுது மழை பெய்தது. பேருந்தின் வெளியே மட்டுமின்றி உள்ளேயும் பெய்தது.அன்று ஆட்சியாளர்கள் மீது மட்டுமல்ல தேர்தல் நேரத்தில் மட்டும் வீரத்தை காட்டும் மக்கள் மீதும் கோபம் வந்தது.
ஊழலை கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளும் சகிப்புதன்மை மீதும் கோபம் வந்தது.

இன்று பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்த அந்த பெண் மக்களின் சகிப்புதன்மையால் விழுந்தார்..ஊழல் லஞ்சம் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது உண்மையில் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
திமுக அதிமுக என பழி போடாமல்  நாம் அனைவரும் இதற்கு காரணம் என்பதை உணர வேண்டும்.

திமுகவிற்கு அதிமுக மாற்று இல்லை. அதிமுகவிற்கு திமுக மாற்று இல்லை. உண்மையான மாற்றத்தை நாம் கொன்டு வராத வரை நிர்வாக சீர்கேடு தொடர்கதையே

Monday 24 August 2015

வியாபாரத்தின் விலை மனிதமா ?

பிற்போக்குத்தனத்தை வியாபாரம் செய்வதில்  அரசியல்வாதிகளும் வனிகர்களும் போட்டி போடுகின்றனர்.
சாதியை வைத்து அரசியல் வியாபாரமும்  பெண்களை வைத்து நகை மற்றும் பெரும்பாலான வனிகர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ்  போன்ற பெரிய நடிகர்கள் திரையில் பெண்ணியம் பேசுபவர்கள் உண்மையில் பெண்களுக்கு எதிரான கருத்திலுள்ள விளம்பர வியாபாரம் என மிக மோசமான அருவருக்கதக்க வியாபாரத்தை செய்து வருகிறார்கள்.

மக்கள்,மக்கள் நலன் என்பவையெல்லாம் காற்றில் பறந்துவிட்டனவோ என வருத்தம் வருகிறது.
பொறுப்பற்ற செயல்களை மக்களான நாம் அனுமதிக்கும் வரை இது போன்ற அவலங்கள் நடைபெறவே செய்யும்

Friday 21 August 2015

    தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அம்மக்கள் நம்புகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்களேயொழிய தலித் மக்களுக்கான தீர்வை தருவதில்லை..

பாபநாசம்



     பாபநாசம் ஒரு மிகச் சிறந்த படம். கமலஹாசன் தன் அறிவை காட்டுகிறேன் என்று கதை எழுதி கொல்லாமல் அளவான கதைக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
  
    குளிக்கும் படம் எடுத்து மிரட்டும் ஒருவனிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள நடக்கும் போராட்டத்தில் கொல்லப்படும்  ஒருவன் அதன்பின் நடக்கும் கதை என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல  என்றாலும் பாபநாசம் நம் கவனத்தா ஈர்பதற்கு காரணம் கதாநாயகனின் கதாபாத்திரமும் கதை சொல்லப்பட்ட விதமும் தான்.

  பொதுவாக  இது போன்ற கதையில் கதாநாயகன் பன்ச் வசனம் பேசியும் நம்ப முடியாத வீரத்தை காட்டியும் தமிழ் சினிமா கதை சொல்லி இருக்கும். ஆனால் வீர வசனம் எதுவும் இல்லாமல் யதார்த்த கதை சொல்லியுள்ளார் இயக்குநர்.

     இவையனைத்தையும் தான்டி  பாபநாசத்தின் சிறப்பு என்னவெனில்  அதிகாரத்தின் எல்லை.ஐஜியின் மகனை கண்டுபிடிக்க ஒரு சராசரி மனிதனை எந்தவித மனித  உரிமையையும் கடைபிடிக்காமல் சட்டமெல்லாம் அதிகார வர்கத்தையும் பணம்  படைத்தவர்களின் சொல்லுக்கு எப்படி அடுகிறது என்பதும் அதில் விட்டில் பூச்சியாக அன்றாடங்காய்சிகள் எப்படி அடிபடுகிறார்கள் என்பதுவுமே.

80 சதவிகித  சதாரண மக்களின் ஆதரவில் அரியன் ஏறும் ஆட்சியாளர்கள் ஓட்டளித்தவர்களை நிராயுதபானியாக அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான சட்டத்தையும் பிடிங்கிக் கொள்கிறார்கள்.
அப்பாவி மக்கள் அறியாமல் செய்யும் சிறு தவறுக்காக காலம் முழுதும் மன உளச்சலில்
வாழ்கிறார்கள்.
இறுதி காட்சியில் கமலஹாசன் கூறுவது போல்  தன் மகன் மீது தவறு இருந்தாலும் அவனை காப்பாற்றவே அந்த   ஐஜி தாய்  முயன்று இருப்பாள்.

அதிகாரம் பணம் இல்லாத தாய்மார்கள் பலர் குற்றம் செய்யாத மகன்களை சிறையில் விட்டு அப்பட்டமான மனித  உரிமை மீறல்களை சந்தித்து வருகின்றனர்.அது போன்ற அப்பாவிகளுக்கு இத்திரைப்படம் பாபநாசத்தை சமர்பிப்போமாக....

Wednesday 19 August 2015

தேர்தல் வர பல மாதங்கள் இருக்கும் நிலையில் போராட்டங்கள் மூலம் தொன்டர்களை தயார் படுத்த தொடங்கி விட்டது கட்சிகள்.அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சில கட்சிகள் எடுப்பதன் மூலம் ஆளும் கட்சியின் கூட்டனியாகவும் எதிர்ப்பதன் மூலம் மாற்று கூட்டனியாகவும் மௌனம் காப்பதன் மூலம் மூன்றாம் அணியாகவும்  தயாராகிரார்கள் என்று யூகம் செய்ய முடிகிறது.கடைசி நேர மாறுதல்களும் அரங்கேற்றமடையும்.

திமுக அதிமுக மட்டுமே பிரதான அணிகள் மற்றவை தங்களின் பலத்தை  பரிட்சித்து தங்களின் வாக்கு சதவிகதத்தை காண்பித்து பின்னாளில் வரும் தேர்தல்களில் கூட்டனி பேரம் பேச வகை செய்யவும் தயாராகிறார்கள்.

மது ஒழிப்பு போராட்டத்தின் மூலம் தங்களின் இருப்பை காட்ட பெரும்பாலான கட்சிகள் முனைந்ததையடுத்து திமுக  ஆதரித்தும் அதிமுக அதை எதிர்கொள்ளவும் தள்ளப் பட்டுவிட்டன..

தொன்டர்களின் உற்சாகமும் வேலையும் கூட்டனி பலமுமே வெற்றியை தீர்மானித்துள்ளன. வரும் தேர்தலுக்கு தற்பொழுதே கட்சிகள் தயாராவது வெற்றியின் தேவையை காட்டுகிறது.

காத்திருப்போமாக

Monday 17 August 2015

மீண்டும் தமிழர்களால் தோற்கடிக்க படும் சூழலே தற்பொழுது நிலவுகிறது.

தீவிரவாதம் என்று எல்லா மக்களை ஏமாற்ற முடியாது என்பதை மீண்டும் நிருபனமாகியுள்ளது.
அனைத்து வாக்குகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே விழுந்ததை பார்த்தால் தேசிய கூட்டனியை விட தமிழ் கூட்டனி மீதே தமிழர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று தோன்றுகிறது.
70 ஆண்டுகளானாலும் 700ஆண்டுகளானாலும்  சமதர்ம சமுதாயத்தை நோக்கி நாம் செல்லாத வரை வளர்ச்சி எல்லாம் கானல் நீர் தான

சாதி அரசியலில் ஊரியுள்ள  அரசியல் தலைவர்கள் அப்பாவிகளின் உதிரம் மூலமாக வளர்க்க நினைக்கின்றார்கள் வீனர்கள்.
மதுக்கோப்பையை பிரபலப்படுத்தியதில் திரைத் துறையினருக்கு ஓரு பெரிய பங்கு உண்டு. அனைத்து கதாநாயகர்களும் குடிப்பது ஒரு பண்பாடு என்பது போல் திரையில் காட்டினர். கலைவானரின் காலை தொடவும் அருகதை இல்லாதவர் சின்ன கலைவானர் என்று கூறிக் கொன்டார்.மதுவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த கலைவானரோடு தங்களை ஒப்பிட்டு கொள்ளும் அறிவிளிகள்
இன்றய கதாநாயகர்கள் அனைவரும் சமூக பொறுப்பு சிறிதும் இன்றியே வசூல் நட்சத்திர அந்தஸ்து என்றே  திரையுலகில் வலம் வருகிறார்கள் என்றால் அது மிகை ஆகாது.
வேலைநிறுத்தம் ஒரு சரியான  ஆயுதம் இல்லை என்று தெரிந்தும் அதையே தொழிற்சங்கங்கள் கையில் எடுப்பது அபத்தமாக  உள்ளது.
உச்சநீதிமன்றம் வேலைநிறுத்ததிற்கு எதிராக பலமுறை தீர்பபளித்த பின்னும் அதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஏற்க்கதக்கதாக  இல்லை
 

Sunday 16 August 2015

நான் எனது என்ற சுயநலத்தை தான்டி நாம் நமது என்னும் பொதுநலத்தில் உள்ளது ஒரு தலைவனின் தகுதி.

Saturday 15 August 2015

KFJ விளம்பர கேவலத்தை எந்த தமிழ் அமைப்போ பெண்கள் அமைப்போ எதிர்காதது ஏன்?
இதை எப்படி மக்கள் ஏற்று கொன்டார்கள்?
வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடியவில்லை.ஆனால் எல்லா பக்கமிருந்தும் வளர்ச்சி என்ற சத்தம் மட்டும் கேட்கின்றது

Monday 11 May 2015

ராமதாஸ், இளங்கோவன்,கிருஷ்னசாமி, திருமாவளவன், ராமகிருஷ்னன், விஜயகாந்த் இவர்கள் அனைவரும் ஜெயலலிதா விடுதலையை விமர்சனம் செய்வது வேடிக்கை.

96ல் இந்த வழக்கு போடப்பட்டது. 2001ல் ராமதாஸ் 2006ல் திருமாவளவன் 2011ல் கிருஷ்னசாமி, ராமகிருஷ்னன் ,விஜயகாந்த் ஆகியோர் கூட்டனி வைத்து அதிமுக பெரிய தோல்வி அடையாமல் பார்த்து கொன்டது மட்டுமின்றி மீண்டும் ஆட்சிக்கு வரவும் உதவினர்

இன்று திடீர் ஞனோதயம் வந்து ஜெயலலிதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் சந்தர்ப்பவாதத்தை மட்டுமின்றி ஜெயலலிதாவும் கருனாநிதியும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான காரணத்தையும் நாம் அறிய முடிகிறது.

Saturday 9 May 2015

திரை உலகம் கதாநாயகர்களுக்கு மட்டும்தான் சொர்க்கம் தயாரிப்பாளர்களுக்கு அல்ல என்பதை ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டதிலிருந்து மீண்டும் நிருபனமானது.
படம் வெற்றி பெற்றால் அதற்கு உரிமை கொண்டாடும் நாயகர்கள் தோல்விக்கு அடுத்தவர்களை கை காட்டுவது வேடிக்கை.

பெரிய இயக்குனர்களாக சொல்லிக் கொள்பவர்கள் புதுமுகங்களை வைத்து படம் எடுப்பதில்லை.மாறாக பெரிய நாயகர்களை வைத்து பெரிய பொருட்செலவில் படம் எடுத்து தயாரிப்பாளர்களை திவாலாக்கிவிடுகிறார்கள்.
ஹாலிவுட்டுக்கு நிகராக எடுக்கிறேன் பேர்வழியில் அடுத்தவர் பணத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் பணத்தை வைத்து ஏன் பிரம்மான்ட படத்தை எடுப்பதில்லை.

தயாரிப்பாளர்களின் அழிவு சினிமா துறையின் அழிவு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

Friday 8 May 2015

திரு டேவிட் கேமரூனின் வெற்றி தமிழர்கள் கொன்டாடப்பட வேண்டிய ஓன்று.
ஈழத்தமிழர்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார் அவர்.ஈழத்தமிழர் பகுதியிகளுக்கே சென்ற அவர் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.முழு ஆதரவுடன் அவர் பிரதமர் ஆகவிடினும் மீண்டும் பிரதமர் ஆனதில் எனக்கு மிக்க மகழ்ச்சியே
முத்தையா முரளிதரன் போன்ற துரோகிகள் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் தமிழர்களுக்கு டேவிட் கேமரூன் ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Thursday 7 May 2015

தேசிய ஊடகங்காக சொல்லிக் கொள்ளும் ஆங்கில ஊடகங்களின் தரம் தாழ்ந்த செயலை நேபாளைத் தொடர்ந்து சல்மான் கான் சிறை தண்டனையிலும் தொடர்கிறது.
.      குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவரை விட 200 கோடி ருபாய் வர்த்தகம் பாதிக்கப்டுவதாக பேசுகிறார்கள்
உயிரிழந்தவர் ஒரு வீடில்லாத தெருவோரவாசி என்பதால் இப்படி சொல்கிறார்களா
இறந்தவர் உலக பணக்காரர் இந்திய பணக்காரர் எனில் இப்படி சொல்வார்களா
ஏழைகள் உயிர் என்றால் இந்தியாவில் மலிவானது என்று டார்சன் இன் இந்தியா திரைப்படத்தில் ஒர் ஆங்கிலேயர் சொல்வதை நிருபிக்கின்றார்களே
அப்படியெனில் ஆங்கிலேயர்களுக்கும் வித்தியாசம் இல்லையோ

Sunday 3 May 2015

இன்றைய கார்பரேட் உலகில் மே தினம் மிகவும் முக்கியத்துவும் பெறுகிறது.
.    உழைப்பை உறிஞ்சும் நிலை மன்னர் காலத்திலிருந்து இன்று வரை உழைப்பை சுரன்டிக் கொன்டுதான் உள்ளார்கள். மன்னருக்கு பணி செய்வதே குடிமக்களின் கடமை என்று இருந்த நிலை மாறி ஊதியத்திற்கேற்ற வேலை வேலைக்கேற்ற ஊதியம் என்ற நிலை வந்தது.ஆனாலும் பெரும் முதலாளிகளின் கரமே ஓங்கி இருந்தது
 8 மணி நேர உழைப்பு 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர களிப்பு என்பதற்காக பெரும் போராட்டத்திற்கு பிறகு பெரும் முதலாளிகளையும் பல அரசாங்கத்தையும் பனிய வைத்தது.
இன்று கார்பரேட்களின் கையிலிருக்கும் உலகம் இதைப் பற்றியெல்லாம் துளி கூட கவலைப்படுவதில்லை. 8 மணி நேரத்தையெல்லாம் தான்டி 12 மணி நேரம் 16 மணி நேரம் என்று நேரமெல்லாம் உழைத்துக் கொன்டு இருக்கின்றார்கள்.
அதிக பணம் என்ற ஒரே காரணத்தினால் அந்நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அதிக நேரம் பணிபுரியும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற நேரத்தில் மே தினத்திற்கான முக்கியத்துவமும் உழைப்பாளர்களின் நலனும் முக்கியத்துவம் பெறுகிறது.உழைப்பாளர்களின் நலனை பின்னுக்கு தள்ளிவிட்டு 8 மணி வேலை நேரம் என்பதை துளியும் மதிக்காமல் உழைப்பு சுரன்டல் மட்டுமே முக்கியம் என்றும் லாபம் உலக பணகாரர்களில் இடம் என்பது மட்டுமே கொள்கை என்றால் நாளை உழைக்க ஒருவரும் இல்லாமல் போவார்கள்.
ஊழல் காதல் மது ஆகியவற்றைப் பற்றி அன்புமணி பேசுவதெல்லாம் மிகவும் விந்தையானது வேடிக்கையானது.
மருத்துவ கல்லூரிக்கு அங்கிகாரம் வழங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு இன்றும் நிலுவையில் உள்ளது
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சசிபெருமாள் போன்று களப்பணியாற்றியவரா அன்புமணி
காதலைப் பற்றி பேச எவ்விதமான தகுதியும் பாமகவிற்கே இல்லை
பாமக செய்வது அறிக்கை அரசியலும் சந்தர்ப்பவாத அரசியலும் மட்டுமே
மக்களின் வெறுப்பை பெறும் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதில்லை.
சாலை மறியல்கள் கவனத்தை ஈர்க்குமேயொழிய போராட்டத்தின் மீது அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும்
மக்களை சென்றடையும் வகையிலும் மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் போராட்டங்கள் இல்லாத வரை நிரந்தரமான தீர்வு எற்படுத்தப் போவதில்லை

Saturday 2 May 2015

ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் சமூகத்தின் மனதிலிருந்து விரட்டாத வரையில் பாலியல் பலாத்காரங்கள் தொடர் கதையே
.       பாலியல் பலாத்காரங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. ஆண் சமூகத்தின் மனநலம் சார்ந்த பிரச்சனை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கும் வரை இது இந்தியாவின் சாபகேடாகும்.
பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கடவுளின் விருப்பம் என்றால் ஆளும் கட்சி வெளியேற வேண்டும் என்பதும் அவருடைய விருப்பமே
ஆட்சியாளர்கள் என்ன பெறுப்பற்ற பேச்சுக்களை வேண்டுமானாலும் பேசலாம் மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
அரசியலைப் பற்றி தாங்கள் கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நினைக்கும் வரை இது போன்ற பேச்சுக்கள் தவிர்க்க முடியாதவை