Monday, 11 May 2015

ராமதாஸ், இளங்கோவன்,கிருஷ்னசாமி, திருமாவளவன், ராமகிருஷ்னன், விஜயகாந்த் இவர்கள் அனைவரும் ஜெயலலிதா விடுதலையை விமர்சனம் செய்வது வேடிக்கை.

96ல் இந்த வழக்கு போடப்பட்டது. 2001ல் ராமதாஸ் 2006ல் திருமாவளவன் 2011ல் கிருஷ்னசாமி, ராமகிருஷ்னன் ,விஜயகாந்த் ஆகியோர் கூட்டனி வைத்து அதிமுக பெரிய தோல்வி அடையாமல் பார்த்து கொன்டது மட்டுமின்றி மீண்டும் ஆட்சிக்கு வரவும் உதவினர்

இன்று திடீர் ஞனோதயம் வந்து ஜெயலலிதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் சந்தர்ப்பவாதத்தை மட்டுமின்றி ஜெயலலிதாவும் கருனாநிதியும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான காரணத்தையும் நாம் அறிய முடிகிறது.

Saturday, 9 May 2015

திரை உலகம் கதாநாயகர்களுக்கு மட்டும்தான் சொர்க்கம் தயாரிப்பாளர்களுக்கு அல்ல என்பதை ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டதிலிருந்து மீண்டும் நிருபனமானது.
படம் வெற்றி பெற்றால் அதற்கு உரிமை கொண்டாடும் நாயகர்கள் தோல்விக்கு அடுத்தவர்களை கை காட்டுவது வேடிக்கை.

பெரிய இயக்குனர்களாக சொல்லிக் கொள்பவர்கள் புதுமுகங்களை வைத்து படம் எடுப்பதில்லை.மாறாக பெரிய நாயகர்களை வைத்து பெரிய பொருட்செலவில் படம் எடுத்து தயாரிப்பாளர்களை திவாலாக்கிவிடுகிறார்கள்.
ஹாலிவுட்டுக்கு நிகராக எடுக்கிறேன் பேர்வழியில் அடுத்தவர் பணத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் பணத்தை வைத்து ஏன் பிரம்மான்ட படத்தை எடுப்பதில்லை.

தயாரிப்பாளர்களின் அழிவு சினிமா துறையின் அழிவு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

Friday, 8 May 2015

திரு டேவிட் கேமரூனின் வெற்றி தமிழர்கள் கொன்டாடப்பட வேண்டிய ஓன்று.
ஈழத்தமிழர்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார் அவர்.ஈழத்தமிழர் பகுதியிகளுக்கே சென்ற அவர் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.முழு ஆதரவுடன் அவர் பிரதமர் ஆகவிடினும் மீண்டும் பிரதமர் ஆனதில் எனக்கு மிக்க மகழ்ச்சியே
முத்தையா முரளிதரன் போன்ற துரோகிகள் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் தமிழர்களுக்கு டேவிட் கேமரூன் ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Thursday, 7 May 2015

தேசிய ஊடகங்காக சொல்லிக் கொள்ளும் ஆங்கில ஊடகங்களின் தரம் தாழ்ந்த செயலை நேபாளைத் தொடர்ந்து சல்மான் கான் சிறை தண்டனையிலும் தொடர்கிறது.
.      குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவரை விட 200 கோடி ருபாய் வர்த்தகம் பாதிக்கப்டுவதாக பேசுகிறார்கள்
உயிரிழந்தவர் ஒரு வீடில்லாத தெருவோரவாசி என்பதால் இப்படி சொல்கிறார்களா
இறந்தவர் உலக பணக்காரர் இந்திய பணக்காரர் எனில் இப்படி சொல்வார்களா
ஏழைகள் உயிர் என்றால் இந்தியாவில் மலிவானது என்று டார்சன் இன் இந்தியா திரைப்படத்தில் ஒர் ஆங்கிலேயர் சொல்வதை நிருபிக்கின்றார்களே
அப்படியெனில் ஆங்கிலேயர்களுக்கும் வித்தியாசம் இல்லையோ

Sunday, 3 May 2015

இன்றைய கார்பரேட் உலகில் மே தினம் மிகவும் முக்கியத்துவும் பெறுகிறது.
.    உழைப்பை உறிஞ்சும் நிலை மன்னர் காலத்திலிருந்து இன்று வரை உழைப்பை சுரன்டிக் கொன்டுதான் உள்ளார்கள். மன்னருக்கு பணி செய்வதே குடிமக்களின் கடமை என்று இருந்த நிலை மாறி ஊதியத்திற்கேற்ற வேலை வேலைக்கேற்ற ஊதியம் என்ற நிலை வந்தது.ஆனாலும் பெரும் முதலாளிகளின் கரமே ஓங்கி இருந்தது
 8 மணி நேர உழைப்பு 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர களிப்பு என்பதற்காக பெரும் போராட்டத்திற்கு பிறகு பெரும் முதலாளிகளையும் பல அரசாங்கத்தையும் பனிய வைத்தது.
இன்று கார்பரேட்களின் கையிலிருக்கும் உலகம் இதைப் பற்றியெல்லாம் துளி கூட கவலைப்படுவதில்லை. 8 மணி நேரத்தையெல்லாம் தான்டி 12 மணி நேரம் 16 மணி நேரம் என்று நேரமெல்லாம் உழைத்துக் கொன்டு இருக்கின்றார்கள்.
அதிக பணம் என்ற ஒரே காரணத்தினால் அந்நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அதிக நேரம் பணிபுரியும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற நேரத்தில் மே தினத்திற்கான முக்கியத்துவமும் உழைப்பாளர்களின் நலனும் முக்கியத்துவம் பெறுகிறது.உழைப்பாளர்களின் நலனை பின்னுக்கு தள்ளிவிட்டு 8 மணி வேலை நேரம் என்பதை துளியும் மதிக்காமல் உழைப்பு சுரன்டல் மட்டுமே முக்கியம் என்றும் லாபம் உலக பணகாரர்களில் இடம் என்பது மட்டுமே கொள்கை என்றால் நாளை உழைக்க ஒருவரும் இல்லாமல் போவார்கள்.
ஊழல் காதல் மது ஆகியவற்றைப் பற்றி அன்புமணி பேசுவதெல்லாம் மிகவும் விந்தையானது வேடிக்கையானது.
மருத்துவ கல்லூரிக்கு அங்கிகாரம் வழங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு இன்றும் நிலுவையில் உள்ளது
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சசிபெருமாள் போன்று களப்பணியாற்றியவரா அன்புமணி
காதலைப் பற்றி பேச எவ்விதமான தகுதியும் பாமகவிற்கே இல்லை
பாமக செய்வது அறிக்கை அரசியலும் சந்தர்ப்பவாத அரசியலும் மட்டுமே
மக்களின் வெறுப்பை பெறும் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதில்லை.
சாலை மறியல்கள் கவனத்தை ஈர்க்குமேயொழிய போராட்டத்தின் மீது அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும்
மக்களை சென்றடையும் வகையிலும் மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் போராட்டங்கள் இல்லாத வரை நிரந்தரமான தீர்வு எற்படுத்தப் போவதில்லை

Saturday, 2 May 2015

ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் சமூகத்தின் மனதிலிருந்து விரட்டாத வரையில் பாலியல் பலாத்காரங்கள் தொடர் கதையே
.       பாலியல் பலாத்காரங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. ஆண் சமூகத்தின் மனநலம் சார்ந்த பிரச்சனை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கும் வரை இது இந்தியாவின் சாபகேடாகும்.
பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கடவுளின் விருப்பம் என்றால் ஆளும் கட்சி வெளியேற வேண்டும் என்பதும் அவருடைய விருப்பமே
ஆட்சியாளர்கள் என்ன பெறுப்பற்ற பேச்சுக்களை வேண்டுமானாலும் பேசலாம் மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
அரசியலைப் பற்றி தாங்கள் கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நினைக்கும் வரை இது போன்ற பேச்சுக்கள் தவிர்க்க முடியாதவை